ஒடுகத்தூர் பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
வேலூர்,நவ.22-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் பேரூராட்சியில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்"அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் சந்தை மேடு பகுதியில் 1.5 லட்சம் லிட்டர்
கொள்ளளவில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஞானசுந்தரம், உதவி செயற்பொறியாளர் அம்சா, செயல் அலுவலர் ஜீவானந்தம், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment