மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
வேலூர்,நவ.23-
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்டத்தில்
2023-24ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வின்போது முன்னோடி வங்கி மேலாளர் ஜாமல் மொய்தீன்,மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமணி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் பத்ம பாபுகவுடு, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் கிருஷ்ணகுமார், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் செல்வி ஷ்யாம் பிரியா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீராம் சந்திரபாபு, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராமதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment