குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மோதி விபத்து
குடியாத்தம்,நவ 7-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சிவூா் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தில் வசிக்கும் சரவணன் த / பெ சாமுவேல் (வயது 36) என்பவர்
இன்று காலை தனது மகனை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்றார் அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து திடீரென இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது இதனால் நிலை தடுமாறிய கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்
மகன் லக்ஷ்னன் (வயது 7 )சிறு காயத்துடன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்றனர்
பின்னர் மேல் சிகிச்சைக்காக சரவணன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment