சமூக சிந்தனையாளர் ஐஏஎஸ் பயிற்சி TNPSC Group l,II&IIA மற்றும் IV ரயில்வே ஆர் ஆர் பி எஸ் ஐ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
குடியாத்தம் ,நவ 7-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்ட பகுதியில் இயங்கி வரும் சமூக சிந்தனையாளர் கி.கிருஷ்ணகுமார் IAS பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி TNPSC , Railway,RRB, SI தேர்வுகள் உட்பட அனைத்து அரசு போட்டி தேர்வுகளுக்குமான 2024-2025 ஆம் ஆண்டு இலவச பயிற்சி வகுப்பிற்கான தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் N.உத்தமன் அவர்கள் தலைமையற்றார்.விழாவில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் K.செந்தில் குமார் , குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி இணை பேராசிரியர் கணிதத் துறை தலைவர் Kகருணாநிதி மற்றும் பெல் குலசேகரன், மின்வாரிய வட்ட தலைவர்.இராமதாஸ்
காவல்துறை கந்தன், இரயில்வேதுறை சுரேந்தர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களை கலந்து கொண்டு போட்டி தேர்வுகளுக்கான எளிய வழிமுறைகளையும் இட ஒதுக்கீடு குறித்தான தெளிவினையும் வழங்கினர்.
நிகழ்வின் முதலில் தமிழ்நாடு மின்வாரிய மற்ற பொருளாளர் சிவா அவர்கள் மொத்த வந்தனம் பாடினார் பயிற்சி மைய இயக்குனர் மகேஷ் குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக பயிற்சி மையம் ஆசிரியர் சி.சுதாகர் அவர்கள் நன்றியுரை நல்கினார். மைய பயிற்சி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment