வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது உள்ள சிலுவையை அகற்றக் கோருதல்
குடியாத்தம், நவ 7-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது சுமார் 100- ஆண்டுகளுக்கு மேலாக அற்புத நாதர்
சமேத வள்ளி தெய்வானை முருகர் கோவிலும் மற்றும் மலை உச்சியில் சுயம்பு சிவலிங்கமும் உள்ள இந்த மலையை பௌர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள் மேலும் இந்த மலையை சுற்றி வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் தாகத்தை தீர்க்க தண்ணீரும் வழங்கி வருகிறார்கள்
சில நாட்களுக்கு முன் இந்த மலைகள் சில விஷமிகள் சிலுவையை நட்டு உள்ளார்கள் இந்த செயல் திட்டமிட்டு இந்துக்களின் மனதில் புண்படுவதத்தில் செய்துள்ளார்கள் எனவே மலையின் மீது உள்ள சிலுவையை அகற்றி சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று இந்து முன்னணி சார்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment