காட்பாடி வட்டார அளவிலான கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்பு
காட்பாடி,நவ7-
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார அளவிலான கலைத் திருவிழா இன்று இரண்டாவது நாளாக காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் வட்டாரத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்துடன் மாணவர்கள் 30 தலைப்புகளில் தங்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிப்பட்டுததும் விதமாக பாட்டு, நடனம், குழு நடனம், ஓவியம் உள்ளிட்ட வகையில் திருவிழாவில் பங்கேற்றனர். பள்ளியின் தலைமையாசிரியர் கே.எம்.ஜோதிஸ்வரபிள்ளை அவர்களின் தலைமையில் காட்பாடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சாமுன்டீஸ்வரி, போட்டிகளின் ஒருங்கிணைப்பு தலைமையாசிரியர்கள் சரஸ்வதி, சீதாலட்சுமி, எம்.கேசவன், சங்கர், சிங்காரவேலன், ஶ்ரீதர் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், கலையாசிரியர் எ.ஆனந்தன்,பட்டதாரி ஆசிரியர் ஜி.டி.பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ் விழாவில் பங்கேற்ற மாணவர்கள் காய்கறிகளை பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் வடிவமைத்தனர். மேலும் மண் சிற்பங்களும் வடிவமைத்தனர், காகித கூழ் பயன்படுத்தியும் பொம்மைகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட உதவி அலுவலர், காட்பாடி வட்டார வள மையத்தின் பயிற்றுநர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment