ராணுவ பயிற்சி பெறும் அலுவலர்களுக்கு மருத்துவ உதவிகள்
வேலூர், நவ 16-
வேலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ அலுவலர்களுக்கான வெளிப்புற ராணுவ பயிற்சி வேலூர் அடுத்த பகுதியில் நடைபெறவுள்ளது பயிற்சிக்கு வரும் அலுவலர்களுக்கு அவசர சேவை அடிப்படையில் மருத்துவ உதவிகள் வழங்கிட கோரி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் எம்.ரோகினிதேவி அவர்களிடம் கடிதத்தை இந்திய மருத்துவ சங்கத்தின் கிளைச் செயலாளர் மற்றும் வேலூர் மண்டல ஃபயர் மார்ஷல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஏ.எம்.இக்ரம் வழங்கினார் .
உதவி முதல்வர் கௌரி வெலி கொண்டலா, இராணுவ வீரர் மணிவண்ணன் காட்பாடி ரெட் கிராஸ் அவைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர். நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் எம்.ரோகினி தேவி தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment