குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி வனத்துறை விழிப்புணர்வு
குடியாத்தம் , நவ 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன சரகம் கல்லபாடி காப்புக் காட்டை அடுத்துள்ள காந்தி கணவாய் கிராம பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்து அதன் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மு. வினோபா வனச்சரக அலுவலர், பி. குமரேசன் வனவர், து.பூபதி வனக் காப்பாளர் ஆகியோர் பொதுமக்கள் யாரும் காப்புக் காட்டிற்கு செல்ல வேண்டாம் எனவும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும்,இரவு நேரத்தில் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் ஆடு மாடுகளை தனியே கட்ட வேண்டாம் எனவும், யாரும் மாட்டுக் கொட்டகையில் உறங்க வேண்டாம் எனவும் முன்னெச்சரிக் கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment