மூன்று சக்கர ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு
குடியாத்தம், நவ. 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த
பெண் தொழிலாளி அதே ஆட்டோ சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பேரணாம்பட்டு அடுத்த செண்டத்துாா், கிருஷ்ணம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சத்தியா(வயது 33). இவர் செம்பேடு அருகே உள்ள காலணி
தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை காலையில் ஆட்டோவில் வேலைக்குச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ இருந்து தவறி விழுந்த சத்யா மீது அதே ஆட்டோவின் பின் சக்கரம் ஏறிய தில் பலத்த காயமடைந்து நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின்பேரில் அங்கு சென்ற கிராமிய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இறந்த சத்தியா வுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment