பள்ளிகொண்டா பகுதியில் இருந்து வேலூருக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் ஊருக்குள் செல்ல அனுமதி மறுப்பு!  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 November 2024

பள்ளிகொண்டா பகுதியில் இருந்து வேலூருக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் ஊருக்குள் செல்ல அனுமதி மறுப்பு! 

பள்ளி கொண்டா பகுதியில் இருந்து வேலூருக்கு வரும் லாரிகள் ஊருக்குள் செல்ல அனுமதி மறுப்பு 

வேலூர் , நவ 19-

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பள்ளி கொண்ட பகுதியில் இருந்து வேலூருக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் ஊருக்குள் செல்ல அனுமதி மறுப்பு
லாரி ஓட்டுனர்கள் போக்குவரத்து பிரிவு போலீசார் உடன் மல்லு க்கட்டு வேலூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணிந்து கொண்டு தான் இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நகர எல்லைக்குள் வாகன கனரக வாகனங்களை செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கை போக்குவரத்து குருவி போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் லாரிகள் வழக்கம் போல் புதிய பைபாஸ் சாலையில் இறங்கி செல்ல முற்பட்டனர் இதனை பேரூர் போக்குவரத்து பிரிவு போலீசார் நின்று கொண்டு லாரிகளை தடுத்து நிறுத்தி நகருக்குள் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததுடன் லாரிகளை சுற்றிச் செல்லுமாறு அறிவுரைகளை வழங்கினார் இதற்கு லாரி ஓட்டுநர்கள் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டருக்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு 50 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டுமென்றால் இதற்கு டீசலை யார் தருவது? லாரிகளின் உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் லாரி ஓட்டுனர்களுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் இடையில் வீண் வாக்குவாதம் ஏற்படும் என்று விவரித்து போக்குவரத்து பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு செவிமடுக்காத போக்குவரத்து பிரிவு போலீசார் நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள். நீங்கள் எங்களுக்கு சொல்லக்கூடாது என்று லாரி ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இல்லையென்றால் லாரிகளை நிறுத்திவிட்டு இரவு நேரங்களில் ஓட்டுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரைகளை போக்குவரத்து பிரிவு போலீசார் வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் எரிச்சல் அடைந்த லாரி ஓட்டுநர்கள் செய்வதறியாது திகைத்தனர்
 லாரிகளை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு தங்களது பிழைப்பு இப்படி வீணாக போகிறது என்று புலம்பி கொண்டுள்ளனர் .ஆக மொத்தத்தில் வேலூர் மாவட்ட காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி பழைய முறைப்படி நண்பகல் 12 மணிக்கு பிறகும் மாலை 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்களை நகருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பேசி ஒரு நல்ல தீர்வை லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கும் வழங்க வேண்டும்என்று அவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad