கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற கூலி தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு
குடியாத்தம் ,நவ 25-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் வசிக்கும் நவீன் குமார் த/ பெ சாமி கண்ணு (வயது 38) வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார் இன்று அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிக் கொண்டார் தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் குளத்தில் தேடிய போது வாலிபர் உயிரிழந்து உள்ளார் தகவல் கிடைத்தவுடன் குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment