பள்ளிக்கல்வி இயக்குநருடன் காங்கேயநல்லூர் பெண்கள் பள்ளி
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சந்திப்பு
காட்பாடி , நவ 25-
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் திருமுருகா கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் முனைவர் சா.கண்ணப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காட்பாடி காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் எஸ்.கே.பிச்சாண்டி, எஸ்.ராமசாமி, கே.டாங்கேயன் ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் பள்ளியின் தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர் பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் சா.கண்ணப்பன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment