மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு உட்கார இடம் இல்லை என கவுன்சிலர்கள் மன வருத்தம்
வேலூர் ,நவ 25 -
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய உறுப்பினர்கள் மன்ற கூட்டம் ஒன்றிய தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. சதுப்பேரிகுப்பம் சிறுக்காஞ்சி ஒன்றிய கவுன்சிலர் செல்வி வள்ளியம்மாள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் கலந்து கொணடனர். இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கை:- கவுன்சிலருக்கு என்று உட்கார இடமே இல்லை, தலைவர்களுக்கு சொகுசாக உட்கார அலுவலகம் உள்ளது மேஜை உள்ளது சொகுசு சேர்கள் உள்ளது ஆனால் கவுன்சிலர்கள் ஆகிய எங்களுக்கு மக்கள் பிரச்சனைகளை மக்கள் எங்களை சந்திக்க வந்தால் நாங்கள் மக்களை உட்கார வைத்து பேச இடம் இல்லாமல் தவித்து வருகின்றோம் எங்களுக்கு பத்துக்கு பத்து ரூம் கட்டி அலுவலகம் திறந்து கொடுக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபி, வின்சென்ட் ரமேஷ் பாபு, துறை சார்ந்த அலுவலர்கள் பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment