100நாள் பணியின் போது உயிரிழந்த கூலி தொழிலாளி
குடியாத்தம் , டிச 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தன கொண்ட பள்ளி ஊராட்சி பகுதியில் 100நாள் வேலை செய்து கொண்டிருந்த ஜோதி க/, பெ கிருஷ்ணமூர்த்தி வயது 58 என்பவர் மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மோடி குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் பிறகு குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்
இறந்த ஜோதி என்பவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார் இது சம்பந்தமாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment