வாக்கு எந்திரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைப்பு
குடியாத்தம் ,டிச 20-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களை இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது .வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா முன்னிலையில் வாக்கு பெட்டி எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறை திறக்கப்பட்டு அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 72 வாக்கு எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர் உடன் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பூங்கோதை
நகர மன்ற தலைவர் எஸ்
சௌந்தர்ராஜன் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த சாமிநாதன் துரை செல்வம் சிலம்பரசன் குணசேகரன் கவிதா பாபு
புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் அதிமுக இராசி சதீஷ்
சரத் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment