வேலூர் , டிச 30 -
வேலூர் மாவட்டம், ஓட்டேரி, முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (30.12.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்த நிகழ்வை தொடர்ந்து வேலூர்
மாவட்டத்தில் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக நேரலை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர்சுஜாதா, மாநகராட்சி துணை
மேயர் சுனில்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment