செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியர் மலர் தூவி மரியாதை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 December 2024

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியர் மலர் தூவி மரியாதை!

வேலூர், டிச 31 -

வேலூர் புதிய  பேருந்து நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியர் மலர் தூவி மரியாதை செய்து, வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வேலூர் மாந கராட்சிக் குட்பட்ட, வேலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வெள்ளி விழா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவானது முக்கூடல் சசூழும் குமரி முனையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 183 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை யொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர், சுஜாதா ஆனந்தகுமார்  துணை மேயர் சுனில்குமார், மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad