விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடலாயத்தின் 1424ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் விருது வழங்கி பாராட்டு
வேலூர் , டிச 13-
தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் செயலாளர் பங்கேற்ற விஸ்வகர்ம ஜெகத் குரு ஸ்ரீ நந்தல் மடலாயத்தின் 1424 ஆம் ஆண்டு குருபூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கம் வட்டம் காந்தப் பளையத்தில் நடைபெற்ற விஸ்வகர்ம குருபூஜை விழாவில் கலச பாக்கம் வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தில் 1400 ஆண்டுகளுக்கமுன் தோன்றிய மிக பழமையான அகில பாரத விஸ்வகர்ம மடாலயம், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், காந்தப்பாளையத்தில் அமைந்துள்ள அகிலபாரத விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடாலயத்தின் 65 பீடாதிபதி ஶ்ரீஶ்ரீஶ்ரீ.சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் தலைமையில் 1423ஆம் ஆண்டு குரு பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பர்வத திருமூலாரண்ய திவ்யசேத்ர கண்ணுவ மகரிஷி ஆஸ்ரம மிருகண்ட நதி மனு, மய, துஸ்ட, சில்பி, விஸ்வக்ஞா விஸ்வகர்ம மகத்துவ ஜெகத்குரு ஆதி சிவலிங்காச்சார்ய மூர்த்திகட்கு 1424 ஆண்டு குருபூஜை விழா அபிஷேக ஆராதானையுடன் துவங்கியது. குருபூஜா விழக்குழு தலைவர் கோ.விசுவநாதன் முன்னிலையில் சமூக ஐவர்ண அனுமன் கொடியினை கேரளா கண்ணுர் நடராஜன் ஏற்றினார்.
வேதபாடசாலை முதல்வர் சிவ.சிவஞானசேகரன், தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர் நிகழ்சிகளை ஒருங்கிணைத்து பேசினர்.பௌரோகித சங்கத்தின் செயலாளர் ஜோதி முருகாச்சாரி, வி.தண்டபாணி சர்மா, ஆகியோர் தலைமையில் 6 கால பூஜைகள் நடைபெற்றது. திருப்பூர் ஜோதிடர் கணியர் இராஜசேகரன் குழுவினர் விடை இங்கே வினா எங்கே என்ற தலைப்பில் பக்தர்களின் கேள்விகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் விடை அளித்தனர்.ஆதீன விருது வழங்கும் விழா 65வது மடாதிபதி சிவராஜ ஞானாச்சாரிய குருஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது. இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றிய மங்கையர்கரசி ஜோதிடத்துறையில் சிறந்து விளங்கும் குருநாதன் அவர்களுக்கும் கலசபாக்கம் வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி விருது வழங்கி பாராட்டினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் என 8பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விக்னேஷ் சுவாமிநாதன் வேலூர் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க தலைவர் சி.தேஜோமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன், பெருந்தச்சன் அப்பர் லட்சுமணன், தூத்துக்குடி வானமாமலை, விஸ்வகர்ம கைவினைஞர் கழகத்தின் சுடலைமுத்து, தென்னிந்திய விஸ்வகர்ம சங்கத்தின் சரவணன், கண்ணமங்கலம் சோமசுந்தரம், திருவல்லிக்கேணி ஆனந்த ஆச்சாரி, அகில இந்திய விஸ்வகர்ம பேரவையின் தலைவர் செஞ்சி எ.குமார், ஓய்வுபெற்ற உதவி ஆட்சியர் கிரிஜா, ஓய்வுபெற்ற தொலைதொடர்வுத்துறை அலுவலர் ராஜேந்திரன், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் (ஓய்வு) தேவ ஆசைதம்பி, தமிழ்நாடு விஸ்வபிராமினர் புரேகிதர்கள் சங்க நிர்வாகிகள் கோவை வெள்ளியங்கிரி ஆச்சாரி கும்பகோணம் யுவராஜ், முருகன் ஸ்தபதி, ஆகியோர் பேசினர்.
குருஸ்வாமிகள் உருவம் மரத்தினால் வடிவமைக்கப்பட்டு தமிழ்நாடு தச்சுதொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அப்பர் லட்சுமணன் அவர்கள் குழுவினருடன் வழங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஜெகதா பரந்தாமன் அன்னதானம் வழங்கினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கான பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குருவின் அருளாசியினை பெற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment