குடியாத்தம் அருகே வாய் தகராறில் ஐஸ் வியாபாரி ஒருவர் வெட்டிக்கொலை
குடியாத்தம் ,டிச 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் விரிசெட்டி பல்லி மதுரா வி .மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த .மகேந்திரன் (வயது-30) த/பெ. திரு.ஆறுமுகம் என்பவர் மேற்படி கிராமத்தைச் சேர்ந்த .குணசேகர் (வயது-62)
த.பெ.நடேசன் என்பவரை இன்று 12-12-2024 மாலை 4.15 மணி அளவில்
அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் குணசேகரன் என்பவரின் வீட்டு வழியாக அதிக வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் இதனால் குணசேகரன் என்பவரும் அவரது மனைவியும் இது சம்பந்தமாக கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது பின்னர் மகேந்திரன் வீட்டுக்கு சென்று அரிவாளை கொண்டு வந்து குணசேகரன் அவரது மனைவியும் வெட்டி உள்ளார் இதில் படுகாயம் அடைந்த இருவரையும் குடியாத்தம் அரசு மருத்துவமனையை கொண்டு சென்றுள்ளனர்
இதில் குணசேகர் வழியிலேயே இறந்து விட்டார் மனைவி மகேஸ்வரி படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இது சம்பந்தமாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த குணசேகரன் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment