நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 December 2024

நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்!

நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது

குடியாத்தம் ,டிச 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் இன்று காலை நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம்  சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்

இதில் குடியாத்தம் அரசு தலைமை மருத்து வமனையின் பல்நோக்கு மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர்
இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று   பரிசோதனைகள் மேற்கொண்டனர்
இம் முகாமில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ் டாக்டர் பிரியதர்ஷினி
மனநல மருத்துவர் டாக்டர் சிவாஜி ராவ் பல் மருத்துவர் ஷாமினி
நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் சுகாதார ஆய்வாளர் அலி
நகர மன்றஉறுப்பினர்கள் ஜி எஸ் அரசு ஆட்டோ எம் மோகன் என் கோவிந்தராஜ் கவிதா பாபு சுமதி மகாலிங்கம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad