குடியாத்தம் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
குடியாத்தம் , டிச 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
நகர புதிய நீதி கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிச்சனூர் அரசமர தெரு அருகே உள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகரச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடந்தது.
நகரப் பொருளாளர் வெங்கடேசன் வர்த்தக அணி தலைவர் கன்னியப்பன் எஸ் எஸ் பேரவை நகர செயலாளர் சசிகுமார் ஒன்றிய தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் மண்டல செயலாளர் சரவணன் ஒன்றிய செயலாளர் ராம இளங்கோவன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். நிர்வாகிகள் சுதாகர் இளஞ்செழியன் வினோத் குமார் சரத்குமார் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment