வேலூரில் அடுத்தடுத்து விபத்து 4 நாட்களில் 5 மரணங்கள் 3 நாட்களில் 2 பெண்கள் உடல் நசுங்கி பலி! பிரம்மபுரம் பகுதியில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 December 2024

வேலூரில் அடுத்தடுத்து விபத்து 4 நாட்களில் 5 மரணங்கள் 3 நாட்களில் 2 பெண்கள் உடல் நசுங்கி பலி! பிரம்மபுரம் பகுதியில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு!

4 நாட்களில் 5 மரணங்கள்
3 நாட்களில் 2 பெண்கள் உடல் நசுங்கி பலி பிரம்மபுரம் பகுதியில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்

வேலூர் , டிச 18 -

வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் அருகே விபத்தில் பெண் பலி; 

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மனைவி மேரி. இருவரும் இன்று இருசக்கர வாகனத்தில் கிரீன் சர்க்கிள் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி மேரியின் மீது ஏறி இறங்கியதில் மேரி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிரீன் சிக்னல் பகுதியில் கனரக வாகனங்கள் , திட்டமிடாமல் செய்யும் மாநகராட்சி பணிகள் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினம் தினம் ஒரு குடும்பத்தினரை இழந்து வருகின்றனர் 
வேலூர் கிரீன் சிக்னல் பகுதியில் கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி பரிதாபமான உயிரிழந்தனர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் SRK அப்பு அவர்கள் பார்வையிட்டனர்  மேலும் மாநகராட்சி நிர்வாகம் விபத்துகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கனரக வானங்கள் நேர கட்டுப்பாடு ,  மாநகராட்சி பணிகள்  மேற்கொள்ளும் போது அதற்கு தகுந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் , போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்து காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினார் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களில் Insurance, FC , polution certificate ஆகியவை இல்லாமல் இருக்கின்றன ஆகியவற்றை முறையாக நடைமுறை படுத்த வேண்டும். அப்பாவி மக்கள் மேல் வழக்கு பதிவு மற்றும் அபராதம் விதிக்கும் நிர்வாகம் முதலில் அரசாங்க வாகனங்களை சரி பார்க்குமாறு  வேலூர் மாநகர மாவட்ட அஇஅதிமுக சார்பில் கேட்டுக்கொண்டார் .
 
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad