வேலூரில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
வேலூர், டிச.18-
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கிறிஸ்தவ
தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு நல வாரியத்தின் மூலம் ஐந்து நபர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்ட உப தேசியர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment