குடியாத்தம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
குடியாத்தம் ,டிச, 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த இராமாலை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை வயது 65 இவரது மனைவி கோமதி விவசாயம் செய்து வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் பள்ளி கொண்ட சாலை ஆர் எஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கி உள்ளார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கழிவறையில் இறந்த நிலையில் இழந்துள்ளார் இதை அடுத்து நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் வீராசாமி உட்பட போலீசார் விடுதிக்கு சென்று இறந்த நிலையில் கிடந்த அண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பிரேத பரிசோதனை முடிவுக்கு வந்த பிறகு எப்படி இறந்தார் என்பதை குறித்து தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment