குடியாத்தம் அருகே முதியவர் தற்கொலை
குடியாத்தம் ,டிச,10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வேப்பூர் கிராமத்தில் குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் தனியார் லாட்ஜில் குடியாத்தம் வட்டம் ராமாலை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை த.பெ. லட்சுமணன் வயது 60 என்பவர் நேற்று 09-12-2024 இரவு 07.30 மணிக்கு வந்து தங்கி உள்ளார் இன்று 10- 12 -2024 காலை 7.30 மணிக்கு ரயில் மூலம் வெளியூர் செல்ல இருப்பதால் எழுப்பி விடுமாறு லாட்ஜ் உரிமையாளர் மாதவன் அவர்களிடம் தெரிவித்தார்
இன்று 10 -12- 2024 காலை 7 மணிக்கு எழுப்ப சென்ற போது குளியல் அறையில் கவிழ்ந்த நிலையில் விழுந்திருந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சோதனை செய்ய அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதின் பேரில் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உதவி ஆய்வாளர் வீராசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்த அண்ணாமலைக்கு கோமதி என்ற மனைவியும் மகனும் உள்ளார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment