ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்துக்கு வேறு நபர்களுக்கு பட்டா. ரத்து
செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த பயனாளிகள்.
குடியாத்தம், டிச. 12
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு வழங்கிய வீட்டு மனைப்
பாட்டாவை 2- ஆவது முறையாக வேறு நபர்களுக்கு வழங்கியதை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பயனாளிகள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
குடியாத்தம் ஒன்றியம், முக்குன்றம் ஊராட்சிக்குள்பட்ட காயிதேமில்லத்
நகரில் 1998- ஆம் ஆண்டு வீடில்லாத முஸ்லிம்கள் 114- பேருக்கும், 2021-
ஆம் ஆண்டு 110- பேருக்கும் அரசு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை
வழங்கியது. இவர்களில் சுமார் 100- பேர் அந்த இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருவாய்த் துறையினர் வீடுகள் கட்டாத காலிப் பட்டாக்களை கணக்கிட்டு அந்த பட்டாக்களில் வேறு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து முதலில் பட்டா வாங்கியவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.இந்நிலையில் செவ்வாய்க்கிழமைஅவர்கள் தாங்கள் ஏற்கனவே வாங்கிய வீட்டுமனைப்
பாட்டாவுக்கான ஆவணங்களுடன் வந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
அளித்தனர்.ஏற்கனவே, பட்டா வழங்கிய இடத்தில் தற்போது மீண்டும் வழங்கிய மாற்று பட்டாக்களை ரத்து செய்யுமாறு அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மெர்லின்ஜோதிகா கோரிக்கை குறித்து விசாரணை செய்வதாக கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment