விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை விஸ்வகர்ம ஜெகத் குரு 65 ஆவது மடாதிபதி சிவராஜ ஞானாச்சரிய சுவாமிகள் அருளுரை
வேலூர் , டிச 21 -
வேலூர் மாவட்டம் விஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டமும் 2025ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழாவும் இன்று 21.12.2024 காலை 11 மணியளவில் வேலூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஆவனா இன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழிக்கேற்ப அனைவரும் விட்டு கொடுத்து மகிழ்சியாக வாழ்வோம் என விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ சுவாமிகள் கூறினார்.
இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன் தொகுப்புரையாற்றினார்.துணைத்தலைவர்கள் எல்.பன்னீர்செல்வம், எம்.ஞானசம்பந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
புதிய வருட நாட்காட்டி வெளியீடு
சங்கத்தின் 2025ஆம் ஆண்டிற்கான மாதாந்திர நாட்காட்டியினையினை வெளியீடு செய்து சீனந்தல் மடாலயத்திதன் 65வது மடாதிபதி விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் அருளுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. வரும் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய வேண்டுமெனில் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் விடுக்கொடுக்க வேண்டும் விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழிக்கேற்ப நாம் நடப்போம் நம் வாழ்க்கையினை மகிழ்சியான வாழ்கையாக மாற்றுவோம் என்றார்.
வாழ்த்துரை மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஓய்பெற்ற இயக்குநர் மருத்துவர் கே.மீனாட்சிசுந்தரம், சீனந்தல் மடலாயத்தின் குருபூஜா விழக்குழு தலைவர் ஜி.விசுவநான், விஐடி பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஆர்.தூண்டில் கருப்பராஜ், ஓய்வுபெற்ற வேளாண்மை பொறியல் துறையின் கண்காணிப்பு பொறியாளர் ஏ.அருணாசலம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்ற செயற் பொறியாளர் இரா.லோகநாதன், குடியாத்தம் திருமகள் அரசுக்கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.குமரகுரு ஆகியேர் வாழ்த்தி பேசினர். விஸ்வகர்ம கைவினை சங்க வேலூர் மாவட்ட தலைவர் விசுவநாதன், மாநில துணைத்தலைவர் எம்.பிச்சாண்டி வடக்கு மண்டல செயலாளர் ஜி.நந்தகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.தலைமை நிலைய செயலாளர்
சு.சோமாஸ்கந்தன்,துணைச்செயலாளர் ஜி.சுவாமிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் கே.குப்பன், எஸ்.ஜகதீசன், ஜெ.ஜெயபிரகாஷ், எஸ்.சக்ரீஸ்வரன், எம்.சீனிவாசன், ஆதிகேசவன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.
முடிவில் பொருளாளர் ஜெ.மணிஎழிலன் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment