விவசாயிகள் சங்க குறை தீர்வு கூட்டம்!
வேலூர்,டிச.21-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் சங்க குறை தீர்வு கூட்டம் தாசில்தார் சிவசங்கர் தலைமையில் நடை பெற்றது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் சங்க குறை தீர்வு கூட்டம் தாசில்தார் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள்
நிறைவேற்றப் பெற்றது. இதில் விவசாயிகள் சங்கத் தலைவர் உதயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கலைவாணி, வருவாய் ஆய்வாளர் சர்குனா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் நாசிய தலித் பாஸ்கரன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment