குடியாத்தம் , டிச 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பாக புதியதாக அத்தி IAS அகாடமி திறப்பு விழா நடைபெற்றது
இதில் அத்தி கல்விக் குழுமத்தின் தலைவர் , அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் p. சௌந்தரராஜன் அவர்கள் மற்றும் அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் P சுகநாதன் சௌந்தரராஜன் அவர்கள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் . அத்தி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட I.P.S (Retd) டாக்டர் C.சைலேந்திர பாபு அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து தமிழ்நாடு தேர்வு ஆணையத்தில் உள்ள அரசு பணிகள் பற்றியும் அதில் உள்ள தேர்வு முறைகள் , பாடங்களை எப்படி படிக்க வேண்டும் ,தயக்கம் இல்லா விடாமுயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். நர்சிங் படிக்கும் மாணவர்களும் IAS தேர்வு எழுத முடியும் என்று மாணவர்களுக்கு தெளிவு படுத்தினார், டாக்டர் திவ்யா சுகநாதன் அவர்கள், KMG கல்விக் குழுமத்தின் தலைவர் திரு K.M.G ராஜேந்திரன் அவர்கள், அபிராமி கல்லூரியின் தலைவர் திரு M.N ஜோதிகுமார் அரசு வழக்கறிஞர் திரு K.M பூபதி , J.K.N பழனி அவர்கள் துணை இயக்குநர், நிர்வாகம், ESIC மருத்துவக் கல்லூரி &பிஜிஐஎம்எஸ் டாக்டர் கருப்புசாமி அவர்கள் ,அத்தி கல்விக் குழுமத்தின் ஆராய்ச்சி குழு தலைவர் டாக்டர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துமனையின் முதல்வர் k .தங்கராஜ் , குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k . குமரவேல் , கோல்டன் காலக்ஸி திரு கோபிநாத் , அத்தி கல்லூரியின் நிர்வாக இயக்குனர் திரு செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தார் .மேலும் அத்தி BNYS மருத்துவர்கள் , அத்தி செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்கள் , குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரியின் விரைவுரையாளர்கள், அத்தி BNYS மற்றும் அத்தி செவிலியர் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர்கள் கலந்துக் கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment