கே.வி.குப்பம் சார் பதிவாளர்
அலுவலகத்தில்
டாக்டர்.அம்பேத்கரின்
நினைவு நாள் அனுசரிப்பு
வேலூர்,டிச 6-
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் 68- ஆவது நினைவு நாளையொட்டி டிச.6 -ஆம் தேதியன்று
நாடெங்கிலும் அரசியல்
தலைவர்கள் மற்றும் பல சமூக நல்ல அமைப்பினர்களால் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அந்த வகையில்,வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சார் பதிவாளர்
அலுவல கத்திலுள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கே.வி.குப்பம் சமூக ஆர்வலர்கள் முரளி ராஜன்,
ஆசிரியர்கள் முருகய்யன்,
சி.ஜெயச்சந்திரன், கே.வி.குப்பம் மு.ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.சரவணன், பூங்குன்றன், மணிவண்ணன், சார் பதிவாளர்.சத்தியமூர்த்தி,
உதவி அலுவலர் கோவிந்தன் மற்றும்
ஆவண எழுத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment