8 கோடியே 41 லட்சத்தில் தரை பாலம் மற்றும் தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 5 December 2024

8 கோடியே 41 லட்சத்தில் தரை பாலம் மற்றும் தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!

8 கோடியே 41 லட்சத்தில் தரை பாலம் மற்றும் தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!

குடியாத்தம் , நவ 5 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை பகுதியில் உள்ள 
கெளன்டன்ய மகா நதியின் குறுக்கே தரை பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இந்நிகழ்ச்சிக்கு 
நீர்வளத்துறை  அமைச்சர்  துரைமுருகன் அவர்கள் இன்று (05.12.2024) வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம். தாழையாத்தம் மற்றும் கண்ணாம்பு பேட்டை இடையே ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் கௌண்டன்ய மகா நதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணியையும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கதவாளம் அருகே கானாற்றின் குறுக்கே ரூ.6 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி மற்றும் வெள்ளக்கல் அருகே கானாற்றின் குறுக்கே ரூ.4 கோடி
மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார்
ஜோலார் பேட்டை தொகுதி
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வில்வ நாதன்
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் நகர 
மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad