வேலூர் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு 7ஆவது ஆயராக அம்புரோஸ் பிச்சை முத்து இன்று பதவி ஏற்பு!
வேலூர்,டிச.9-
வேலூர் மாவட்டத்தில் அகில உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான ரோம் அலுவலகத்தில் இருந்து திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேரருட்திரு ஆம்ப்ரோஸ் பிச்சை முத்து அவர்களை வேலூர் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு 7ஆவது ஆயராக கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நியமித்தார். ஆயர் 3 .5 .1966 அன்று செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் என்ற ஊரில் பிறந்தார். ஊரில் தன்னுடைய தொடக்கக்கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி பயின்றார். சென்னை சாந்தோம் இளம் குருத்துவ கல்லூரியில் பயின்று பின்னர் பூந்தமல்லி தூய இருதய குருத்துவ கல்லூரியில் தத்துவ இயல் மற்றும் இறையியல் பயின்றார் . இதைத் தொடர்ந்து 25 .3 .1993 அன்று சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தின் பேராயர் ஜி.கஷ்மீர் ஞானாதிக்கம் எஸா.ஜே.அவர்களால் குருவாக அர்ச்சிக்கப்பட்டார். அவர் பெல்ஜியத்தில் உள்ள லூவேன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் தத்துவயியல் முதுகலை பட்டமும், ரோமில் உள்ள ஏஞ்சலிக் கத்தில் தத்துவ இயலில் முனைவர் பட்டமும் பெற்றவர் .பிறகு சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மறை மாவட்டமாக உருவானது. இம் மறை மாவட்ட பங்கு தளங்களில் பங்கு தந்தையாகவும், ஆர்.சி.எம். பள்ளிகளின் கண்காணிப் பாளராகவும், ஆயரின் ஆலோசகர் ஆகவும் முதன்மை குருவாகவும் பணியாற்றினார். பெங்களூருவில் செயல்படும் அகில இந்திய போன்டிபிகல் பணி அமைப்பின் தேசிய இயக்குனராகவும், ரோமில் செயல்படும் உயர் மட்ட குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். ஆயர் அவர்களுக்கு 9 .12 .2024 திங்கட்கிழமை அதாவது இன்று மாலை 4.30 மணி அளவில் ஆயர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சென்று டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் ஆயரின் அபிஷேக பெருவிழா இரவு 8.30 மணி வரை நடைபெறும் .விழாவில் திருத்தந்தை, இந்திய தூதரின் செயலர், பேராயர்கள், ஆயர்கள், குருக்கள் ,இருபால் துறவியர்கள், அருட்கன்னியர்கள் மற்றும் இறை மக்கள் 6000 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த வேலூர் மறை மாவட்டத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மறை மாவட்டங்கள் இவரது ஆளுகைக்கு உள்பட்டு செயல்படும் இநத் தகவலை வேலூர் தற்காலிக தலைவர் டாக்டர் ஜான் ராபர்ட் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment