விஐடி பல்கலை வேந்தர் அவர்களுக்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்ச்சி
காட்பாடி, டிச 8-
வேலூர் மாவட்டம் விஐடி பல்கலைகழகத்தின் வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களின் 85 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளையின் அவைத்தலைவர் முனைவர் செ .நா.ஜனார்த்தனன், அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மருத்துவ குழுவின் தலைவர் வீ.தீனபந்து, மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்ஸஎஸ்.ரமேஷ்குமார்
ஜெயின் வி.காந்திலால்படேல், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் பொருளாளர் வி.பழனி, உள்ளிட்டோர் இன்று பல்கலைகழக வளாகத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர் இந்த சந்திப்பின் போது விஐடி பல்கலை
கழகத்தின் துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை சிறப்பாக செயலாற்றி வருகிறது பாராட்டுகள் தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள் என்று வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment