கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 December 2024

கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியாத்தம் , டிச 3-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உடனடியாக தரம் உயர்த்த கோரி அனைத்து கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பலம் நேர் சாலை எம்ஜிஆர் சிலை முன்   நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சமூக சேவகர்  கோ. ஜெயவேல் புதிய நீதி கட்சி நகர செயலாளர் கைத்தறி காவலன் 
 எஸ் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி எஸ் எம் தேவராஜ்  சு.சம்பத்குமார் வழக்கறிஞர்கள் என். குமார் கே தியாகு வி ஜி பழனி பி எம் தினகரன் என் சம்பத் நகர செயலாளர் எஸ் சங்கர் நவ்ஷாத் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் பிச்சனூர் கங்காதர சாமி நகராட்சி நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி சுமார் 21 ஆண்டுகளாக போராடி வருகிறோம் ஆனால் இன்று வரை எந்தவிதமான முயற்சியும் பள்ளி கல்வித்துறை எடுக்கவில்லை இதனால் வன்மையாக கண்டிக்கிறோம்

பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பாக ரூபாய்  1-லட்சம் கடந்த 2015 ஆண்டு அரசுக்கு செலுத்தி உள்ளோம்

பிச்சனூர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் நெசவு மற்றும் தீப்பெட்டி தொழில் செய்யும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை உயர்கல்விக்கு 9-வகுப்பு சேர்ப்பதற்கு பல்வேறு இடையூறுகள் உள்ளது எனவே கங்காதர சாமி நகராட்சி நடுநிலை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உடனடியாக தரம் உயர்த்தினால் இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பெரிதும் பயனடைவார்கள்  என்று  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad