காட்பாடி உழவர்சந்தையில்
வியாபாரி களுக்கே முக்கியத்துவம்: பொதுமக்களுக்கு காய்கனிகளை விற்பனை செய்வதில் வியாபாரிகள் சுணக்கம்!
வேலூர்,டிச.16 -
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உழவர் சந்தை ரயில் சந்திப்பு நிலையம் அருகில் இயங்கி வருகிறது. இந்த காட்பாடி உழவர் சந்தைதான் வேலூர் மாவட்டத்திலேயே அதிக விற்பனை நடக்கும் பகுதியாக திகழ்கிறது. இந்நிலையில் இந்த உழவர் சந்தைக்கு கண்காணிப்பாளராக விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .இவர் பணிக்கு வந்ததிலிருந்து உழவர் சந்தையின் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகச சொல்ல வேண்டும் என்றால் சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்த உழவர் சந்தையில் காய்கனிகள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் ஆகியோர் அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இங்கே விற்பனை செய்யப்படும் தரமானது முதல் அதிக தரமான காய்கனிகள் பதுக்கி வைக்கப்பட்டு வியாபாரிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு வியாபாரிகள் பொறுக்கி எடுத்துக்கொண்டு அவர்கள் கழித்துச் செல்லும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வியாபாரிகளுக்கு சேவை செய்கின்றனரேற தவிர பொதுமக்களுக்கு சேவை செய்ய தயாராக இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு பட்டப் பகலிலேயே இது போன்ற தில்லாலங்கடி வேலைகள் காட்பாடி உழவர் சந்தையில் அரங்கேறி வருகிறது .இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு ஒரு கணிசமான தொகையை உழவர் சந்தை கண்காணிப்பாளர் பெற்றுக் கொண்டு தனக்கு ஒன்றுமே தெரியாதது போல பாசாங்கு காட்டி வருகிறார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நிலைமை மிகவும் படு கேவலமாக சென்று கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .காட்பாடி உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கனிகள் எப்படி உள்ளன என்பதை நீங்கள் உள்ளே சென்று பார்த்தாலே சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற அளவிற்கு உள்ளது. ஆனால் உழவர் சந்தைக்கு வெளியில் விற்கப்படும் காய்கனிகள் அதன் தரம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு நிலைமை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கலாம். பொதுமக்கள் இளிச்சவாயர்கள் ஆக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இங்கு கட்டாயமாகிறது. காரணம் வேலூர் மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ள காட்பாடி உழவர் சந்தையை படுபாதாளத்துக்கு தள்ளி கொண்டு செல்வதற்கு சில விஷமிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் உழவர் சந்தையில் உள்ள சில கருப்பு ஆடுகள் இந்த பணியை சாதுர்யமாக யாருக்கும் தெரியாது என்பது போல நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய விசாரணை நடத்தி யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை வேளாண் விற்பனை குழு எடுக்க வேண்டும் என்று காட்பாடி உழவர் சந்தையில் காய்கனிகள் வாங்கும் நுகர்வோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இந்த வேண்டுகோள் ஆனது விரைவில் போர்க்கொடி தூக்கும் அளவிற்கு செல்வதற்கு முன்பாக நடவடிக்கை எடுத்தால் நலம் பயக்கும் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள். மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற பிரச்சனைகளில் நேரடியாக விசாரணை நடத்தி எங்கு தவறு நடக்கிறதோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நுகர்வோர்களின் ஒட்டுமொத்த விருப்பமாக எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment