வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!
குடியாத்தம் ,டிச 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் சுப லட்சுமி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்
நேர்முக உதவியாளர் நெடுமாறன் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்
குடியாத்தம் அடுத்த சூராளூர் சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது அதை சீரமைக்க வேண்டும்
குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத பிரச்சனைகள் உள்ளது அதை சரி செய்ய வேண்டும்
மோடி குப்பம் பகுதியில் அமைய உள்ள மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் வர வாய்ப்புள்ளது எனவே அதை வேறு இடத்தில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடியாத்தம் பகுதியில் விவசாய நிலங்களில் யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது அதை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்
வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வனத்துறையினர் அதிக கவன செலுத்த வேண்டும்
தொடர் மழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கூடுதல் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற விவாதங்கள் நடைபெற்றது அனைத்துக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்தார்
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வனத்துறை தோட்டக்கலை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் சம்பத் நாயுடு சாமிநாதன் சேகர் பழனியப்பன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment