குடியாத்தம் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் , டிச 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்தும் அவர் உடனடியாக பதவி விலகக் கோரியும் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மீதான பொய் வழக்கை கண்டித்தும் அதற்கு காரணமான அமித்ஷா வின் ஏவல் துறையை கண்டித்தும் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் இன்று (20.12.2024)
வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் G.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார் வேலூர் மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், எஸ்சி பிரிவு மாநில செயலாளர் சுப்பிரமணி, குடியாத்தம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் தனசேகரன், வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மாநில பேச்சாளர் நாட்டாமகர் அப்துல் அக்பர், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம், பேரணாம்பட்டு கிழக்கு வட்டார தலைவர் செல்வகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன் குமார், குடியாத்தம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோதி கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிகழ்வில்
சிறுபான்மையினர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் MD.ராகிப், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சங்கர், நித்தியானந்தம், தாண்டவமூர்த்தி, பள்ளிகொண்ட பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா, மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், முனுசாமி, சக்கரவர்த்தி, சரவணன், பாஸ்கரன், செந்தில், உவைஸ் அஹமத் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் யுவராஜ், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் காளியப்பன், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாவட்ட கலை பிரிவு தலைவர் காத்தவராயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment