காவல் துறை தலைமை இயக்குநர் போக்குவரத்து காவல் துறை தலைவருடன் இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் சந்திப்பு!
வேலூர் , டிச 9 -
வேலூர் இந்திய மருத்துவ சங்க டாக்டர் ஐடாஸ்கடர் சி எம் சி கிளை செயலாளரும், போக்குவரத்து குழுமத்தின் முன்னாள் தலைமை காப்பாளர் அ.மு.இக்ராம் தலைமையில் உதவி காப்பாளர்கள் குமரன் ஆர்.சீனிவாசன், பி.என்.ராமச்சந்திரன் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் சென்னையில் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜி வால் அவர்களையும் போக்குவரத்து காவல் துறையின் தலைவர் எஸ்.மல்லிகா அவர்களை சந்தித்து மீண்டும் போக்குவரத்து குழுமத் தினை ஏற்படுத்தவும், காவலர்களுக்கு முதலுதவி, மற்றும் உயிர் காக்கும் சேவைகள் குறித்து பயிற்சி அளிக்கவும் கோரிக்கை மனுவினை அளித்தனர். அப்போது போக்குவரத்து காவல்துறையின் தலைமையிடத்து உதவி கண்காணிப்பாளர் சம்பத் உடனிருந்தார். இக்குழுவினர் நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றனர். உரிய கடிதத்தினை பெற்று நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறினார்கள்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment