பேரணாம்பட்டு , டிச 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர், பொருளாதார மேதை,
டாக்டர். மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் இன்று (28.12.2024) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் ராஜீவ்காந்தி திடலில் நடைப்பெற்றது.
நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் G.சுரேஷ்குமார் தலைமை தாங்கி, டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரணாம்பட்டு நகர தலைவர் முஜம்மில் அஹ்மத், தெற்கு வட்டார தலைவர் சா.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட நிர்வாகிகள் முனுசாமி, பாரத். நவீன்குமார், குடியாத்தம் தெற்கு வட்டாரத் தலைவர் ஜோதி கணேசன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், தனசேகர் குடியாத்தம் நகர தலைவர் விஜயன், மாநில சிறுபான்மையினர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் MD.ராகிப், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் தேவகிராணி ராஜேந்திரன், சக்கரவர்த்தி, பாஸ்கரன், இர்ஷாத் அஹ்மத், செந்தில் மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் காளியப்பன், அ.தொ.கா. ஊடகப் பிரிவு தலைவர் சிவக்குமார் மற்றும் நகர, வட்டார நிர்வாகிகள் ரஜினிகாந்த், மணிவண்ணன் , சிவகாமி, ஆடிட்டர் இர்ஃபான், நாகேஸ்வரன்,ராகேஷ், ரங்கநாதன் , பழனிவேல், தல்ஹா, நஸ்ருதீன், ரையான், பயாஸ், கமலக்கண்ணன், சேகர், பாக்கர், தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment