குடியாத்தம் அருகே மனித வனவிலங்கு மோதல் தொடர்பாக கிராமிய கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு பிரச்சாரம்
குடியாத்தம் ,டிச 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சைனகுண்டா பகுதியில் மனித வன விலங்குகள் மோதல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று காலை நடைபெற்றது
இந்த பகுதியில் தர்மபுரி மாவட்டம் கலை நிலா கிராமிய கலை குழுவினர் மூலம் ஆடல் பாடல் கிராமிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு வன சரக அலுவலர் வினோபா தலைமையில் நடைபெற்றது இதில் சைன குண்டா வனப்பிரிவு வனவர் சுரேஷ் வனக்குழு தலைவி நாகராணி வனப் பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் 10 கிராமங்களில் நடைபெற உள்ளது தற்போது இன்று போடியப்பனூர் மோர்தானா சைன குண்டா கொட்டமிட்டா தகொண்டபல்லி
ஆகிய கிராமங்களில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியின் போது சிறுத்தைகள் ஊருக்குள் வருவதற்கே முக்கிய காரணம் பொதுமக்கள கால்நடைகள் மேய்ச்சலுக்காக காட்டுக்குள் செல்வதால் அதை பின் தொடர்ந்து விலங்குகள் வர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்கள் 30-12-2024 அன்று மனித வனவிலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் குடியாத்தம் அடுத்த அனுப்பு ராமா துருகம் மூலகாங்குப்பம் பூசாரி வலசை கே மோட்டூர் ஆகிய பகுதியில் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment