குடியாத்தம் , டிச 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நடுப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவர் அசோக் நகர் பகுதியில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளார் இந்நிலையில் நேற்று காலை செதுக்கரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 40) என்பவர். சீனிவாசன் நடத்தி வரும் பங்க் கடைக்குச் சென்று வாட்டர் பாட்டில் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் வந்துள்ளார். வாங்கிய பொருட்களுக்கு சீனிவாசன் பணம் கேட்க, பணம் தர முடியாது என இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா சீனிவாசனை கையால் பலமாக தாக்கியுள்ளார் இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment