மாமனார் வீட்டில் மருமகன் லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை அப்பகுதியில் பரப்பரப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 December 2024

மாமனார் வீட்டில் மருமகன் லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை அப்பகுதியில் பரப்பரப்பு!

குடியாத்தம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை 
 
குடியாத்தம் ,டிச 30 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வீர செட்டி பள்ளி கோயில் மேடு அருகில் இன்று  அதிகாலை  2 :00  மணிக்கு பரதராமி காவல் நிலைய சரகம் வீரிசெட்டிப்பள்ளி கிராம கோயில்மேடு பகுதியில்  வினோத்குமார் (வயது- 25) கூலி தொழிலாளி த/பெ ஏழுமலை, சின்னபாலம் பாக்கம், பாண்டிய மடுகு பகுதியைச் சேர்ந்தவர்   அவருடைய மனைவி மீனாவின் பெரியப்பா வெங்கடேசன் வ- 45  S/o சின்னசாமி,  என்பவரது வீட்டில் லுங்கியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவியின் உறவினர்கள் அவரது உடலை கீழே இறக்கி வைத்து தானாக இறந்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர்.
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வந்த காவல்துறையினர் மேற்படி பிரேதத்தை கைப்பற்றி சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர் இறந்த வினோத் குமாரின் உறவினர்கள் பிரச்சனை செய்யும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்த பரதராமி போலீசார் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு அனுப்பி வைக்கப்பட்டது 
இறந்த வினோத் குமாரின் சொந்த ஊரான சின்ன பாலம் கிராமத்தில் அவருடைய உறவினர்கள் அவர் அண்ணனுடைய மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு பிரச்சினை செய்ததாக தெரிய வருகிறது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad