குடியாத்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக குடியேறும் போராட்டம்
குடியாத்தம் ,டிச 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன் தலைமை தாங்கினார் எம்.அண்ணாமலை எஸ். சண்முகம் சி.மார்க்கபந்து கே. பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிபிஎம் மாநில குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி டில்லி பாபு போராட்டத்தை துவக்கி வைத்தார்
மாவட்ட செயலாளர் எஸ் டி சங்கரி
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே சாமிநாதன் சி சரவணன் மாவட்ட குழு பி குணசேகரன் நகர செயலாளர் பி. குபேந்திரன் மாவட்ட குழு பி காத்தவராயன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் இதில் குடியாத்தம் தாலுகா கொண்டசமுத்திரம் ஊராட்சி செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் உள்ள 32 குடும்பங்களுக்கு கடந்த 2000 ஆண்டில் கலைஞர் ஆட்சியில் இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது வழங்கப்பட்ட பட்டாவை அரசு பதிவேட்டில் பதிவு செய்யக்கோரி கடந்த 12 9 2024 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற போது வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் ஆன்லைன் பட்டா வழங்குவதாக உறுதி அளித்தார்கள்
இது நாள் வரை ஆன்லைன் பட்டா வழங்காததை கண்டித்து உடனே பட்டா வழங்க கோரி குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் 32 குடும்பத்தினர் உடன் குடியேறும் போராட்டம் நடைபெற்றது இதில் அனைத்து குடும்பத்தினரும் வட்டாட்சியர் வளாகத்தில் சமையல் செய்யும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது
இதனால் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஆன்லைன் பட்டா வழங்குவதாக உறுதி அளித்தனர்
வட்டாட்சியர் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தது இதனால் வட்டாட்சியர் வளாகம் பரபரப்பு காணப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment