மெத்தனப் போக்கில் நடைபெறும் சாலை பணிகள் இன்னும் எத்தனை பேரை பலி வாங்குமோ!  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 December 2024

மெத்தனப் போக்கில் நடைபெறும் சாலை பணிகள் இன்னும் எத்தனை பேரை பலி வாங்குமோ! 

மெத்தனப் போக்கில் நடைபெறும் சாலை பணிகள் இன்னும் எத்தனை பேரை பலி வாங்குமோ! 

வேலூர் ,‌டிச 16-

வேலூர் மாவட்டம் அருகே சாலைப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட வரும் இடங்களில் முறையான பாதுகாப்பும் மற்றும் சாலையில் உள்ள மண் பிரச்சினைகளில் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றது குறிப்பாக இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் தங்கை   தடுமாறி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழப்பு.

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் ஆலயம் முதல் ஜோதி பிரியாணி கடை வரை உள்ள சாலைகளில் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த நிலையில் அங்கு கடந்து இரண்டு நாட்களாக பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது நேற்றைய தினம் இரண்டு வாலிபர்கள் இரு
சக்கரத்திலிருந்து நிலை தடுமாறி விழுந்து காயத்துடன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் 16.12.24 திங்கட்கிழமை தலை நசுங்கி பெண் பலி வேலூர் கணியம்பாடி பெரிய பாலம் பாக்கம் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 32). இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் தங்கை அஸ்வினி (வயது 28) அழைத்துக் கொண்டு, வேலூரில் இருந்து காட்பாடி சாலையில் செல்லும் போது நிலை தடுமாறி விழுந்ததில் அஸ்வினி மீது லாரி ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார். அங்குள்ள ஜோதி பிரியாணி கடை எதிரே சாலை வரும் கால்வாயில் அடிக்கடி அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருவதை அக்கம் பக்கம் உள்ள கடை உரிமையாளர்கள் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் மேலும் அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்களை சந்தித்து விரைவாக பணிகளை முடிக்க ஆணையிடு‌மாறு மாவட்ட
ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.உடன் பகுதி கழகச் செயலாளர் தோட்டப்பாளையம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் M.A ஜெய்சங்கர் மாமன்ற உறுப்பினர்கள் S. எழிலரசன்  குருமூர்த்தி சுரேந்தர் தங்கம் கோபால் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad