அதிமுக முன்னாள் அமைச்சர் அவர்களை தரக்குறைவாக விமர்சித்த குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 December 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் அவர்களை தரக்குறைவாக விமர்சித்த குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி!

அதிமுக முன்னாள் அமைச்சர் அவர்களை தரக்குறைவாக விமர்சித்த குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி

குடியாத்தம்,டிச 16-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்களின் தலைமையில் 16.12.24 திங்கட்கிழமை மாலை 1 மணி  அளவில் குடியாத்தம் காவல் நிலையத்தில் நகர ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்களிடம் புகார் மனு அளித்தார். 

 விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் அவர்களை  பற்றி தரை குறைவாக விமர்சித்த திமுக கழகத்தை சேர்ந்த குடியாத்தம் குமரன் மீது குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்களிடம் நடவடிக்கை எடுக்க கோரி நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது 

உடன் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி எஸ் அமுதா சிவப்பிரகாசம் ஒன்றிய கழக செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ் டி சிவா கழக நிர்வாகிகள் ஏ .ரவிச்சந்திரன் மூ.பூங்கொடி  என் தனஞ்செய ஆர்கே.மகாலிங்கம், ஜி. தேவராஜ், சேவல்.நித்தியானந்தம், எஸ்.டி மோகன்ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ஏ.சிட்டிபாபு, ரேவதி மோகன், மெடிக்கல் எஸ்.சரவணன் ஜி எஸ் தென்றல் குட்டி உட்பட வார்டு கழக செயலாளர்கள், வார்டு கழக நிர்வாகிகள், நகர சார்பு அணி செயலாளர்கள்,   ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad