கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்ற சுகாதார அலுவலருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர்
வேலூர், டிச.3
வேலூர் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதி கோரிமேடு தெருவில் கன மழை காரணமாக மழைநீர் தேங்கியது. மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அந்த பகுதிக்கு நேரில் சென்று கழிவு நீர் கால்வாய்களை பார்வையிட்டார். அப்போது கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு இதற்கான காரணத்தை கண்டறிந்தார் தொடர்ந்து வேலூர் மாநகராட்சியின் சுகாதார அலுவலரிடம் அந்த கழிவு நீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார் . வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வரவழைத்து உடனடியாக அந்த கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அப்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கு தேங்கி நின்ற மழைநீர் முழுவதுமாக வடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வின்போது அவருடன் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் சுகாதார அலுவலர், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment