வேலூர் , டிச 24 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக கோரியும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (24.12.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் காகிதப் பட்டறை அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக வேலூர் ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியரிடம் ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
நிகழ்விற்கு வேலூர் மாநகர மாவட்ட தலைவர் பி.டீக்காராமன் தலைமை தாங்கினார். வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் G.சுரேஷ்குமார் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சங்கர், வீராங்கன், நித்தியானந்தம், தாண்டவ மூர்த்தி, குடியாத்தம் நகர தலைவர் விஜயன், மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் மாவட்ட துணைத் தலைவர்கள் முனுசாமி, சக்கரவர்த்தி மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன்குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி மற்றும் நவீன்பிரபு, ராகேஷ், தமிழரசன், உமாபதி, முகம்மது உசேன், ரங்கநாதன், ஜெயகோபி, கதிர்வேல், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment