சிறுத்தை தாக்கியதில் ஆடு பலி - குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை தொடர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் அச்சம்
கே வி குப்பம், டிச 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,,
கேவி குப்பம் அருகே துருவம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்
சிறுத்தை பிடிக்க ட்ராப் மற்றும் ட்ரோன் கேமரா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வரும் நிலையில் குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி வித்யா என்பவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையில் சிறுத்தை புகுந்துள்ளது அதில் ஒரு ஆட்டை தாக்கியுள்ளது இதில் ஆடு பலியான நிலையில் அருகே இருந்த மாடுகளையும் தாக்க முயற்சி செய்துள்ளது மேலும் சிறுத்தை அங்கிருந்து ஓடி விட்ட நிலையில்
இதனையடுத்து இதுகுறித்து வித்யா குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் வனத்துறையினர் உயிரிழந்த ஆட்டை பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சிறுத்தை நட மாட்டத்தால் கிராம மக்கள் அச்ச மடைந் துள்ள நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து உடனடியாக சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment