(95 வயது) மூதாட்டியின் கண்கள் தானம்
பேரணாம்பட்டு ,டிச 31 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம், எருக்கம் பட்டு கிராமத்தில் வசித்து வந்த காலஞ்சென்ற N.R. முனிசாமி அவர்களின் மனைவி N.M. ஆதியம்மாள் (வயது 95) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
அவரது கண்கள் பிள்ளைகள் N.M. பாலாஜி, N.M. கேசவன்,
N.M.அரிகிருஷ்ணன் ஆகியோர் ஒப்புதலுடன் ஆதியம்மாள் அவரின் கண்கள் வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குடியாத்தம் ரோட்டரி சங்க கண் மற்றும் உடல் தான குழு தலைவர் எம்.ஆர்.மணி முன்னிருந்து ஏற்பாடுகளை செய்தார் . கண்தானம் செய்யப்பட்ட அகர்வால் கண் மருத்துவமனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment