தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை முகாம்!
குடியாத்தம் , டிச 31 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜல் ஜீவன் மிஷன் 2024-25 திட்டத்தின் கீழ் ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதவல்லி சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம் உதவி செயற் பொறியாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார இயக்க மேலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். மகளிர் திட்டம் உமா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
ஊராட்சிகளில் விநியோகிக்கப்படும் குடி நீர் எவ்வாறு பரிசோதனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆயிரம் லிட்டர் தண்ணீரில் 4 கிராம் குளோரின் கலக்க வேண்டும் என்றும், அதனை கலக்கும் முறைகள் குறித்தும் உதவி நீர் ஆய்வாளர் வரலட்சுமி பயிற்சி அளித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment